டூவீலர் மீது லாரி மோதி மில் சூப்பர்வைசர் பலி
காங்கேயம், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த பாலன், 27; திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-திருப்பூர் சாலை பெருமாள்மலை அருகேயுள்ள தனியார் ஸ்பின்னிங் மில் சூப்பர்வைசர். இவருடன் வேலை பார்க்கும் ஊழியர் விக்னேஷ், 28; இவருடன் ஹோண்டா பைக்கில் காங்கேயத்துக்கு சொந்த வேலையாக சென்று விட்டு மீண்டும்மில்லுக்கு திரும்பினார்.சிவன்மலை அருகே வந்தபோது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன், 58, ஓட்டி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பாலன் இறந்தார். விக்னேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.