வழக்கம்போல் மினி பஸ்கள் இயக்கம் 25 கி.மீ., துாரமாக நீட்டித்தும் அனுமதி
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 110 மினி பஸ் இயங்குகிறது. இதில் மாநகரில் மட்டும், 60 பஸ் இயக்கப்படுகிறது. இதற்கான அவகாசம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, 15ம் தேதி முதல் இயக்கப்படவில்லை. அனுமதிக்காக மினி பஸ் உரிமையாளர் காத்திருந்தனர்.அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து நேற்று, 11:00 மணி முதல், மாவட்டத்தில் மினி பஸ்கள் வழக்கம் போல் இயங்க துவங்கின. அதேசமயம் நேற்று காலை மினி பஸ் இயங்காததால் கிராமப்புற பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.நண்பகல் முதல் மினி பஸ்கள் இயங்குவதை அறிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அதேசமயம் நேற்று முதல், 25 கி.மீ., வரை இயக்கி கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.முன்பு நகருக்குள், 4 கி.மீ., கிராம பகுதியில், 16 கி.மீ., இயக்க வேண்டும். தற்போது, 35:65 சதவீதமாக நகர்-கிராமப்புற மினி பஸ் இயக்க சேவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று, மாவட்ட மினி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் ஜெகதீஷ் கூறினார்.