உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு; அமைச்சர்

234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு; அமைச்சர்

காங்கேயம், தி.மு.க., கட்சித்தலைமை சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' பெயரில், கட்சியை பலப்படுத்தும் திட்டத்தை அக்கட்சி தலைமை முன்னெடுத்துள்ளது.இதுகுறித்து திருப்பூரில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:நாளை (ஜூலை 3ம் தேதி) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதியிலும் வீடுகள் தோறும் சென்று மக்களை சந்தித்து, நான்கரை ஆண்டு கால ஆட்சியில் தி.மு.க., செய்த சாதனைகள் குறித்தும், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்தும் விளக்கப்படும். லோக்சபா தேர்தலில் தமிழகத்த்தில் வெற்றி பெற முடியாத நிலையில், மத்திய அரசு தமிழகத்தை எந்த வகையில் எல்லாம் வஞ்சிக்கவும், தண்டிக்கவும் முடியுமோ அதையெல்லாம் முன்னெடுத்து வருகிறது. வரும் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. தி.மு.க., அனுதாபிகள் மட்டுமின்றி பிற கட்சியினரையும் சந்தித்து மத்திய அரசின் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விளக்குவதும் மிக முக்கியம். லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., தற்போது இணைந்துள்ளது. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அ.தி.மு.க.,வை மக்கள் புறக்கணிப்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மனித வள மேலாண்மைதுறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், தினேஷ்குமார் மற்றும் பத்மநாபன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !