விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர்
ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்-தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, 269 மாணவியருக்கு வழங்-கினார். அப்போது அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 6,097 மாணவர், 7,495 மாணவியர் என, 13,592 பேருக்கு மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. இதன்படி இன்று முதற்கட்டமாக, 238 மாணவர், 930 மாணவியர் என, 1,168 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மாணவர் நலனுக்காக காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ சந்திர-குமார், மேயர் நாகரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.