தி.மு.க., 17ல் மனுத்தாக்கல் அமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் வரும், 17ல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.இதுபற்றி வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதா-வது: ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளராக அறிவிக்-கப்பட்டுள்ள சந்திரகுமார், வரும், 17ம் தேதி நண்பகல், 12:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்வார். தேர்தலில், 1.20 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம். முதல்வர் ஈரோடு வந்தபோது மக்கள் காட்டிய ஆர்வத்தால், இதை கூறுகிறோம். அ.தி.மு.க., தேர்தலை புறக்கணிதது பற்றி கூற ஏதுமில்லை. ஆனால், கடந்த காலங்களில் விதிமீறல் இருந்ததால் புறக்கணிப்ப-தாக கூறுவதை மறுக்கிறோம். ஓட்டுப்போட செல்லும் வாக்-காளர், அவரது விருப்பத்தை தான் ஓட்டாக போடுகிறார். தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில், சிலருக்கு வருத்தம் இருக்கலாம். அதை மதிக்கிறோம். அவர்களும் தங்களது தேர்தல் வேலைகளை கட்டாயம் செய்வார்கள். பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளதால் மக்களை எளிதாக சந்தித்து, நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறுவோம். கடந்த தேர்தலில் யாரையும் பட்டியில் அடைக்கவில்லை. இவ்வாறு கூறினார்.