உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்

வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்

காங்கேயம், காங்கேயம் தாலுகா சிவன்மலையில், வருவாய்த்துறை சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் கலெக்டர் மனிஷ் தலைமை வகித்தார்.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சிவன்மலை உள் வட்ட பகுதிகளை சேர்ந்த, 361 பயனாளிகளுக்கு நத்தம் இலவச வீட்டு மனை பட்டா, 99 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை (பூமி தானம்) பட்டா, 26 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நத்தம் பட்டா, 116 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நத்தம் பட்டா வழங்கினார். நிகழ்வில் தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம், மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ