உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை அருகே அதிசய காளான்

சென்னிமலை அருகே அதிசய காளான்

சென்னிமலை, சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி அம்மன்கோவில் புதுாரில் வாகை தொழுவு அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்பு பகுதியில், ௨ அடி உயரத்தில் காளான் வளர்ந்துள்ளது. காளானில் அடுக்கடுக்காக, 10க்கும் மேற்பட்ட இதழ்கள் காணப்படுகின்றன. இதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர். விஷ காளானாக இருக்கலாம் என்ற அச்சத்தால், யாரும் பறிக்க முயலவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !