உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் போன் பறிப்பு சகோதரர்களுக்கு காப்பு

மொபைல் போன் பறிப்பு சகோதரர்களுக்கு காப்பு

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், கடந்த ஒரு வாரமாக மொபைல் போன் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சுற்றித்திரிந்த, 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கருங்கல்பாளையம் கமலாநகரை சேர்ந்த முகமது சரீப் மகன்கள் நாகூர் மீராசா, 21, சம்சுதீன், 20, என்பதும், ஒரு வாரமாக ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இவர்கள் மீது சூரம்பட்டி, வெள்ளோடு உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ