உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு எம்.பி., தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

ஈரோடு எம்.பி., தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒழுங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், தலைவர் மற்றும் ஈரோடு எம்.பி., பிரகாஷ் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம், 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த, 1.87 லட்சம் குடும்பங்களில், 78,506 குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. வாய்க்கால் துார்வாருதல், மண் கரை, கல் கரை, பண்ணை குட்டை அமைத்தல், முடிவுற்ற சாலை பணிகள், திறன் வளர்ப்பு பயிற்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் நிதிகள் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகளின் முன்னேற்றம், தேவையான மாற்றங்கள், குறை, கோரிக்கை குறித்து கேட்டறியப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், எம்.பி., அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ