தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் குரங்கு நடமாட்டத்தால் பீதி
தாராபுரம்: தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் சில தினங்களாக மூன்று குரங்குகள் நடமாடி வருகின்றன. பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணிகளின் கைகளில் உள்ள பொருட்களை, குழந்தைகளிடம் உள்ள தின்பண்டங்களை பறித்து செல்கின்றன. இதனால் பதறி சிதறி ஓடி பீதி அடைகின்றனர். திடீர் திடீரென கடைகளிலும் புகுந்து பொருட்களை எடுத்து பறக்கின்றன. இதனால் பயணிகள் முதல் கடைக்காரர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட, கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.