மேலும் செய்திகள்
சரியும் தார்ச்சாலையால் மக்கள் அச்சம்
08-Aug-2026
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி, 39வது வார்டு சின்ன மாரியம்மன் கோவில் அடுத்த, சேக்கிழார் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டம் மூலம், கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடையை துார்வாரும் பணிக்காக, சாலையின் நடுவில் மேன்ஹோல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேன்ஹோல் சாலை மட்டத்தை விட, அரை அடி உயரம் அதிகமாக உள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள கான்கிரீட் கட்டுமானங்கள் உடைந்து சேதமாகி கிடக்கிறது. இதனால் அப்பகுதி பள்ளமாக உள்ளதால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் இரு சக்கர வானங்களில் செல்வோர், தடுமாறி விழுந்து விடுகின்றனர். கடந்த ஒரு மாதமாக நிலவும் இப்பிரச்சனைக்கு, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
08-Aug-2026