என் ஊர் என் கனவு திட்ட ஆவணங்கள் வெளியீடு
ஈரோடு: ஈரோட்டில் கடந்த, 5 ஆண்டுகளில் அரசால் நிகழ்த்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஆவணம் மற்றும் 'என் ஊர் என் கனவு' திட்ட இலக்கு-2030 உத்திகள் மற்றும் செயல் திட்ட ஆவண வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கடந்த ஜன., 30 ல் 'என் ஊர் என் கனவு' திட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டன. அவர்கள் கூறிய கருத்து, ஆலோசனைப்படி ஈரோடு மாவட்டத்தில் வரும், 2030ம் ஆண்டு உத்திகள், செயல் திட்டம் குறித்த ஆவணம் தயார் செய்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டார். ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் 'Erodecoop' செயலி சேவை துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.