நம்பியூர் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
நம்பியூர்:நம்பியூர், தபோபத்தினி அம்பாள் உடனமர் தான்தோன்றீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.இந்த சிவன் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். மேலும் நம்பியூர் பகுதியின் பெரிய விநாயகர் கோவிலை பார்த்து, சிவன் கோவில் அமைந்துள்ளது. நம்பியாண்டார் நம்பி என்ற அரசர் ஆட்சி செய்த போது, கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறகிறது. தான்தோன்றீஸ்வரர், தபோவர்த்தினி சன்னதி, விநாயகர், முருகன், செந்துார் முருகன், நவக்கிரகங்கள் மற்றும் உபசன்னதிகள் உள்ளன.இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று முதல் கால யாக பூஜை தொடங்கி, நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. பின், 9:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.