உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தர்ணா

நம்பியூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தர்ணா

நம்பியூர், நம்பியூர் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. தலைவராக செந்தில்குமார் (தி.மு.க.,), செயல் அலுவலராக நடராஜன் உள்ளனர். கடந்த ஆறு மாதமாக கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., கவுன்சிலர்கள் ராதா (1வது வார்டு), சுப்புலட்சுமி (3வது வார்டு), லட்சுமி (8வது வார்டு), கண்மணி (11வது வார்டு), செந்தில்குமார் (14வது வார்டு), நந்தகுமார் (15வது வார்டு), அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சரவணன் (12வது வார்டு), சுப்பிரமணியம் (7வது வார்டு), காங்., கவுன்சிலர்கள் தீபா (துணைத்தலைவர்), ரேவதி (4வது வார்டு), தங்கவேல் (5வது வார்டு), பா.ஜ., கந்தசாமி (10வது வார்டு) உள்ளிட்ட, 12 கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவர் செந்தில்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, செயல் அலுவலர் நடராஜனிடம் மனு அளிக்க நேற்று முன்தினம் மாலை சென்றனர்.செயல் அலுவலர் மனுவை பெற மறுத்ததால், 12 கவுன்சிலர்களும் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை