உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நந்தவன தோட்டத்துக்கு கிடைத்தது தார்ச்சாலை

நந்தவன தோட்டத்துக்கு கிடைத்தது தார்ச்சாலை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டு நந்தவனதோட்டம் நான்-காவது வீதியில் தார்ச்சாலை சேதமடைந்தது. மாநகராட்சி நிர்வா-கத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பல-னில்லை. இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள், கண்டன போஸ்டர் வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று விபரம் கேட்டறிந்து, நடவ-டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதை தொடர்ந்து சென்ற அதிகாரிகள், சாலை நடுவில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் மீது போட்டிருந்த கற்களை அகற்றிப்-போட்டனர். ஆனால் பணியை ஆரம்பிக்கவில்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்தும் நமது நாளிதழில் படத்துடன் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மாலை வீதி கசிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியில் குழாய் அமைத்தனர். அதை தொடர்ந்து தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று நிறைவடைந்-தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ