மேலும் செய்திகள்
மொபைல் குழுக்களுக்கான தேர்தல் பணி ஒதுக்கீடு
22-Apr-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ., தலைமையிலான போதை பொருள் தடுப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதை பயன்பாட்டை தடுக்கும் விதமாக போதை பொருள் தடுப்பு படை அமைக்கப்படும் என்று முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார். இதன்படி போதை பொருள் தடுப்பு படை அமைப்பதற்கான உத்தரவு கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் ஒரு போதை பொருள் தடுப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஐ., கார்த்தி மற்றும் ஐந்து போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தனியாக ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. படையினர் ஓரிரு நாளில் பணியை துவக்குவர் என போலீசார் தெரிவித்தனர்.
22-Apr-2026