தேசிய டெங்கு தினம்விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் :நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் மலேரியா பிரிவு சார்பில், தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கமிஷனர் சிவகுமார் தலைமை வகித்தார். மாநகர் நல அலுவலர் கஸ்துாரிபாய் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 'டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, தற்போது அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை கொடுப்பதாக' அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜான்ராஜா, பாஸ்கரன், களப்பணி உதவியாளர் சபரிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.