மேலும் செய்திகள்
எம்.ஆர்.கே., கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
29-Oct-2026
ஈரோடு: இந்திய வாகன பொறியாளர் சங்கம் (எஸ்.ஏ.ஈ.,) - தெற்கு பிராந்தியத்தின் சார்பில், நந்தா பொறியியல் கல்லுாரியின் இயந்திரவியல் துறையுடன் இணைந்து, தேசிய அளவிலான இரண்டு நாட்கள் கொண்ட மிதிவண்டி வடிவமைப்பு சவால் இறுதி போட்டி நடந்தது.முதல் நாள் நிகழ்விற்கு நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். சென்னையில் உள்ள இந்திய டி.ஐ., மிதிவண்டி நிறுவன பொது மேலாளர் வெங்கடேஷ்வரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.எஸ்.ஏ.ஈ., இந்தியா தெற்கு பிராந்திய தலைவர் தினேஷ் சியாம்சுந்தர், செயலாளர் முனைவர் பாஸ்கர சேதுபதி ஆகியோர் பேசினர்.பின்னர், 9வது பதிப்பாக நடைபெறும் மிதிவண்டி வடிவமைப்பு சவால் இறுதி போட்டியின் செயல் பாடுகளை, அதன் அங்கத்தினர் பாலாஜி எடுத்து கூறினார். கல்லுாரி முதல்வர் ரகுபதி தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை தலைவர் முத்துகுமார் வரவேற்றார். இந்திய வாகன பொறியாளர் சங்க,- தெற்கு பிராந்திய அங்கத்தினர் சுபாஷ் நன்றி கூறினார்.புள்ளிகள் அடிப்படையில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை, கேரள மாநிலத்தின் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலை கழக அணியும், இரண்டாம் இடத்தை இடுக்கி அரசு பொறியியல் கல்லுாரி அணியும் பெற்றன. சென்னை புஸ்ச் நிறுவன வணிக ரீதியாக வழிநடத்தும் செந்தில்குமார், எஸ்.ஏ.ஈ., இந்தியாவின் துணைத் தலைவர் ராஜேந்திரன், சென்னை இசட்.எப் குழும மூத்த பொது மேலாளர் சிவக்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற அணி களுக்கு விருது, பரிசு வழங்கினர். இயந்திரவியல் துறை பேராசிரியர் சென்னியங்கிரி நன்றி கூறினார்.நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, நந்தா தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
29-Oct-2026