கோபி சிருங்கேரி மடத்தில் நவசண்டி ஹாேமம்
கோபி: நவராத்திரியை முன்னிட்டு, கோபி சிருங்கேரி சங்கர மடத்தில், கடந்த, 2ம் தேதி நவசண்டி ஹாேமம் துவங்கியது. நேற்று முன்தினம் கலச ஸ்தாபனம், நவசண்டி பாராயணம் நடந்தது. நேற்று காலை நவசண்டி ஹாேமம், தம்பதி பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடு பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.