உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் விதி மீறல் வழக்கில் நா.த.க.,வினர் கோர்ட்டில் ஆஜர்

தேர்தல் விதி மீறல் வழக்கில் நா.த.க.,வினர் கோர்ட்டில் ஆஜர்

ஈரோடு, ஈரோடு லோக்சபா தொகுதி தேர்தல், 2024ல் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் போட்டியிட்டார். வேட்புமனு தாக்கலின் போது ஈரோடு அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்றார். தேர்தல் நடத்தை விதிமீறி, கட்சி கொடியை கைகளில் ஏந்தி சென்றனர்.இதுதொடர்பாக அரசு மருத்துவமனை போலீசார், வேட்பாளர் கார்மேகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சரவணன், நவநீதன், மேனகா, அருண்குமார், சீதாலட்சுமி உள்பட அடையாளம் தெரியாத நபர்கள் என, 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருஷ்ணபிரியா முன் நேற்று வந்தது. இதில் நவநீதனை தவிர மற்ற ஐந்து பேர் ஆஜராகினர். ஆறு பேரையும் வரும், 27ல் மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை