உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண் அள்ளுவதில் வில்லங்கம் தாராபுரத்தில் பேச்சுவார்த்தை

மண் அள்ளுவதில் வில்லங்கம் தாராபுரத்தில் பேச்சுவார்த்தை

தாராபுரம்: தாராபுரம், நல்லதங்காள் அணை பகுதியில், வண்டல் மண் அள்ளுவதாக கூறி, கிராவல் மண்ணை திருடி செல்கின்றனர். இதை தடுக்க வேண்டும் என்று, தாராபுரம் தாசில்தார் திரவியத்திடம், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் முன்னிலையில், விவசாயிகளுடன் தாசில்தார் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் திருப்தி அடையாத விவசாயிகள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர். இதையடுத்து நல்லதங்காள் அணை பகுதிக்கு, தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர். சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ