மேலும் செய்திகள்
புதிய திட்டத்தில் 26 தடங்களில் மினி பஸ்
17-Jun-2025
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தில், 70 பஸ்களுக்கான அனுமதி சீட்டை பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கி, இயக்கம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.போக்குவரத்து துறையின் விரிவான மினி பஸ் திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 65 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 97 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கு, குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, 65 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டது. இதில், 4 புதிய பஸ்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு சேவை துவக்கி வைக்கப்பட்டது.மேலும், இடம் பெயர்வு வழித்தட திட்டத்தின் கீழ், 69 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 66 பஸ்களுக்கு இடம் பெயர்வு திட்டத்தில் இயக்க அனுமதிச்சீட்டு சேவை துவங்கி வைக்கப்பட்டது. இச்சேவை மூலம் குக்கிராம மக்கள், நகர்புறத்துக்கு வந்து செல்ல ஏதுவாகும். நேற்று, 4 புதிய வழித்தட பஸ்கள், 66 இடம் பெயர்வு வழித்தட திட்ட பஸ்கள் என, 70 பஸ்களுக்கான அனுமதிச்சீட்டை அதற்கான உரிமையாளர்களிடம் வழங்கி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., வி.சி.சந்திரகுமார், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், துணை போக்குவரத்து ஆணையர் செல்வகுமார், ஆர்.டி.ஓ.,க்கள் மேற்கு - பதுவைநாதன், பெருந்துறை மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Jun-2025