உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செய்திகள் சில வரிகளில்....

செய்திகள் சில வரிகளில்....

இந்து முன்னணி சார்பில் ஆம்புலன்ஸ் சேவை

கோபி: இந்து முன்னணி, கோபி நகரம் சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து, மக்கள் பயன்பாட்டுக்கு, 24 மணி நேரம் ஆம்புலன்ஸ் சேவை நேற்று துவங்கியது. மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், நகர தலைவர் விமல்குமார் முன்னிலை வகித்தனர்.

பாதுகாப்பு ஆலோசகர் பணி; வக்கீல் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவில் சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பு பிரிவுக்கு, திறமை வாய்ந்த வக்கீல்களிடம் இருந்து 'துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்' என்ற பணிக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. பணிக்கான தகுதி, தேர்வு முறை, விண்ணப்பம், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்த இதர தகவல்களுக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://erode.dcourts.gov.inல் தெரிந்து கொள்ளலாம்.

வி.சி., தெருமுனை பிரசாரம்

ஈரோடு: விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில், ஈரோடு மரப்பாலம் நால்ரோட்டில் தெருமுனை பிரசார கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தனவிஜயன் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் பங்கேற்றார். உளுந்துார்பேட்டையில் அக்.,௨ல் நடக்கும் மது, போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு குறித்து பேசினார். திருநகர் காலனி, பி.பெ.அக்ரஹாரம் பகுதியிலும் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் அம்ஜத்கான், மகளிரணி மாநகர செயலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேவல் சூதாட்டம்; மூவர் கைது

காங்கேயம்: காங்கேயம் அருகே ஊதியூரில், ஊதியூர் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஊஞ்சதோட்டம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கொடுவாய் நகராஜ், 42; காடையூர் விஜயகுமார், 37; நிழலி சாமிக்கண்ணு, 35, ஆகியோரை கைது செய்தனர். இரு சேவல், மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

தி.மு.க., கொண்டாட்டம்

பவானி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சுப்ரீம் கோர்ட் ஜாமினில் நேற்று விடுவித்தது. இதை பவானி நகர தி.மு.க.,வினர் கொண்டாடினர். பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகில், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், நகர துணை செயலாளர் ரவி, நகர மாணவரணி அமைப்பாளர் விமல்குமார் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இலவச சைக்கிள் வழங்கல்

பெருந்துறை: பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் தலைமை வகித்து, 200- மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ