உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கைத்தறி நெசவாளர்களுக்கு செப்., மாத ஓய்வூதியம ்வரல

கைத்தறி நெசவாளர்களுக்கு செப்., மாத ஓய்வூதியம ்வரல

கைத்தறி நெசவாளர்களுக்குசெப்., மாத ஓய்வூதியம ்வரல'சென்னிமலை, அக். 17--ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளன தலைவரும், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., நெசவாளரணி அமைப்பாளருமான ராஜேந்திரன், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக கைத்தறி நெசவாளர் வாழ்வாதாரம் பாதுகாக்க, கைத்தறி நெசவாளர் ஓய்வூதியத்தை, ௧,000 ரூபாயில் இருந்து, ௧,200 ரூபாயாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி. அதே வேலையில் பிரதி மாதம், ௫ம் தேதி தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை நெசவாளர்கள் பல அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் செப்., மாத ஓய்வூதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவண செய்ய வேண்டும். அரசால் ஏற்கனவே ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்த, நெசவாளர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ