உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாராயிபாளையத்தில் ஒன்றல்ல... ரெண்டு... சிறுத்தை மக்கள் மட்டுமல்ல வனத்துறையினரும் கலக்கம்

மாராயிபாளையத்தில் ஒன்றல்ல... ரெண்டு... சிறுத்தை மக்கள் மட்டுமல்ல வனத்துறையினரும் கலக்கம்

புன்செய்புளியம்பட்டி, மாராயிபாளையம் மலைக்குன்றில் இரண்டு சிறுத்தை பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் கலக்கம் அடைந்துள்ளனர். விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து சில நாட்களுக்கு முன் வெளியேறிய ஒரு சிறுத்தை, புன்செய் புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் கிராமத்தில் பட்டப்பகலில் புகுந்து, ஆடுகளை அடித்து கொன்றது. பிறகு அப்பகுதியில் உள்ள மலைக்குன்றுக்கு சென்று விட்டது. மக்கள் புகாரின்படி டிரோன் கேமரா மூலம், விளாமுண்டி வனத்துறையினர் நடத்திய சோதனையில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. சிறுத்தையை பிடிக்க மலை அடிவாரத்தில் ஒரு கூண்டு வைத்து, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். ஆனாலும் சிறுத்தை சிக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை மேலும் ஒரு சிறுத்தை மலை குன்றின் மீது படுத்திருந்ததை கண்ட மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதே சிறுத்தைதான் இருக்கும் என்று நினைத்தாலும், டிரோன் கேமராவில் வனத்துறையினர், நேற்று மதியம் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இரண்டாவது சிறுத்தை இருப்பதும் உறுதி செய்தனர். இதனால் மக்கள் மட்டுமின்றி வனத்துறையினரும் கலக்கம் அடைந்துள்ளனர். பொக்லைன் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் சிறுத்தையை பிடிக்க, மலை மீது கூண்டு வைத்தனர். ஒரு சிறுத்தை இரண்டாக அதிகரித்துள்ளதால், மாராயிபாளையம் கிராமத்தில் மக்கள் அதிர்ச்சியும் அதிகரித்துள்ளது. ஆறு மாதமாக உள்ளதுஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆறு மாதத்துக்கும் மேலாக மலை குன்றில் சிறுத்தை பதுங்கியுள்ளது. இதனால், 50க்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டுள்ளன. குன்றில் குரங்குகள் நடமாட்டமும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஒரு குரங்கு கூட இல்லை. இந்நிலையில் இரண்டு சிறுத்தை பதுங்கியுள்ளது, அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி