மேலும் செய்திகள்
மனைவி மாயம்; கணவர் புகார்
24-Aug-2025
விழிப்புணர்வு பேரணி
23-Aug-2025
பவானி :பவானியை அடுத்த கருவல்வாடிபுதுார், பாடசாலை வீதியை சேர்ந்தவர் அசோக்குமார், 36; ஆப்பக்கூடல் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு நர்சிங் படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை, பயிற்சிக்காக வாங்கி வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்த, சிலிண்டரில் இருந்து ஆக்சிஜனை டியூப்பை மூக்கில் வைத்தபடி மயங்கி கிடந்தார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது அம்மா கதவை உடைத்து சென்று பார்த்தார். மயங்கி கிடந்த மகனை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
24-Aug-2025
23-Aug-2025