உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி சத்துணவு அமைப்பாளர்கள் விடுப்பு போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி சத்துணவு அமைப்பாளர்கள் விடுப்பு போராட்டம்

ஈரோடு :தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, சத்துணவு அமைப்பாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கை எண்: 313ல் சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர், சமையலர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அவற்றை நிறைவேற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.சிறப்பு பென்ஷன், 6,850 ரூபாய் வழங்க வேண்டும். சத்துணவு பணியில் காலியாக உள்ள, 20,000 அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராஜூவிட்டி தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சத்துணவு அமைப்பாளர்கள் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலர் தனுஷ்கோடி தலைமையில் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில், 378 பேர் பங்கேற்றுள்ளனர். சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் பாதிக்காத வகையில், சமையலர், சமையல் உதவியாளர்கள் நேற்றைய சத்துணவு சமைக்கும் பணிகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை