உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

புன்செய்புளியம்பட்டி :தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், பவானிசாகர் வட்டார கிளை சார்பில், பவானிசாகர் யூனியன் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சரிதா தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வி, பொருளாளர் காந்திமதி முன்னிலை வகித்தனர். தேர்தல் கால வாக்குறுதிகளான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் வட்டாரத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ