பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.92 லட்சம் காணிக்கை
சத்தியமங்கலம், டிச. 27-பண்ணாரியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 92 லட்சத்து, 82 ஆயிரத்து, 46 ரூபாய் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.சத்தியமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. எண்ணும் பணியில் பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். உண்டியல்களில் மொத்தம், 92 லட்சத்து, 82 ஆயிரத்து, 46 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 437 கிராம் தங்கம், 608 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.