ஒருபக்கம் எதிர்ப்பு; மறுபக்கம் கொதிப்பு பொதுமக்களால் அதிகாரிகள் திகைப்பு
ஒருபக்கம் எதிர்ப்பு; மறுபக்கம் கொதிப்பு'பொதுமக்களால் அதிகாரிகள் திகைப்புநம்பியூர், நவ. 24--நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடக்கரை ஊராட்சி நல்லாண்டிபுதுாரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆழ்குழாய் அடிபம்பு மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அடி பம்புக்கு பதிலாக மின் மோட்டார் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் நிதியில் மின் மோட்டார் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் சென்ற அதிகாரிகளிடம் ஒரு சிலர் மின் மோட்டார் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்ததால், நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் திரும்பி விட்டனர்.இந்நிலையில், 20க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள், மோட்டார் பொருத்த வலியுறுத்தி, நம்பியூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று திரண்டனர். விரைவில் மின் மோட்டார் பொருத்தி தருவதாக அதிகாரிகள் உறுதி கூறவே, திரும்பி சென்றனர்.