அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் கழிப்பறை திறப்பு
பவானி, பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கூடுதலாக கழிப்பறை கட்டித்தர பள்ளி நிர்வாகத்தினர், சில மாதங்களுக்கு முன், பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதை தொடர்ந்து, 12.70 லட்சம் ரூபாய் செலவில், கழிப்பறை கட்டப்பட்டது. பள்ளிக்கு வரும் பெண்களின் பயன்பாட்டுக்காக, நகர்மன்ற தலைவர் சிந்துாரி, நேற்று திறந்து வைத்தார். கட்சியினர், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடனிருந்தனர்.