பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
காங்கேயம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையத்தில், காங்கேயம் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், பகுதி நேர நியாய விலை கடை கட்டடம் கட்டப்பட்டது. இதை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன், சரவணன், நாட்டராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் பகுதிநேர நியாய விலை கடையாக, 43 மற்றும் முழு நேர நியாய விலை கடையாக, 43 என, 86 கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சாலை பராமரிப்பு பணி, கூடுதலாக கலைஞர் கனவு இல்ல திட்டப்பணி, இலவச பட்டாக்கள் உள்ளிட்ட விடுபட்ட பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.