மேலும் செய்திகள்
VTV Ganesh கலாய் Speech at Brother Press Meet
28-Oct-2024
ஈரோடு:கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன் தலைமையிலானோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: அந்தியூர் தாலுகாவுக்கு உட்பட்ட வீரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 5.30 ஏக்கர் நிலம் உள்ளது.இதில், 2.02 ஏக்கர் நிலத்தை அரசு கலை கல்லுாரி கட்டுவதற்கு கையகப்படுத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, ஊர்மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம், அறநிலையத்துறை மற்றும் பிற துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கினோம். கோவில் நிலங்களை கோவில் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். கோவில் நிலத்தில் கல்லுாரி கட்டக்கூடாது. இவ்வாறு கூறினர்.
28-Oct-2024