மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு
ஈரோடு: சென்னிமலை அருகே ஈங்கூர் சாலை, திருமுகமலர்ந்தபுரத்தை சேர்ந்த மக்கள் பழனிசாமி, பாரதி, சங்கர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: ஏற்க-னவே, மூன்று மொபைல் டவர் செயல்படுகிறது. தற்போது 'ஏர்டெல்' டவர் அமைக்க ஆயத்தப்பணி நடந்து வருகிறது. இதனால் அதிகமான கதிர்வீச்சு இருக்கும். சுற்றுச்சூழல், மக்கள், பறவைகள் பாதிக்கும். மக்கள் இல்லாத பகுதியில் டவர் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.