உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை கடத்தல் விவகாரம் எஸ்.பி.,யிடம் பெற்றோர் மனு

குழந்தை கடத்தல் விவகாரம் எஸ்.பி.,யிடம் பெற்றோர் மனு

ஈரோடு, சித்தோடு அருகே சேலம்-கோவை நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் கோணவாய்க்கால் பகுதியில், ஆந்திர மாநிலம் நெல்லுார் தம்பதி ஆறு ஆண்டாக தங்கி துடைப்பம் தயாரித்து விற்கின்றனர். இவர்களின் ஒன்றரை வயது மகள், கடந்த, 1௬ம் தேதி அதிகாலை கடத்தி செல்லப்பட்டது.இதுகுறித்த புகாரின்படி சித்தோடு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆனாலும் இதுவரை குழந்தையை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று மதியம் மனு கொடுத்தனர். குழந்தையை விரைவாக கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ