உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா கட்சியினர், அமைப்பினர் மரியாதை

கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா கட்சியினர், அமைப்பினர் மரியாதை

சென்னிமலை, சென்னிமலையில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் கொடி காத்த குமரன் பிறந்த நாளான நேற்று, அவர் பிறந்த இல்லத்தில் அவரது போட்டோவுக்கு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது.கலெக்டர் கந்தசாமி தலைமையில், அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அவரது வாரிசுதாரர்களை கவரவித்தனர். நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.மணி மண்டபம் கட்ட பூஜை கொடி காத்த குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில், அவருக்கு மணி மண்டபம் அமைக்க, சென்னிமலை பகுதி மக்கள், 26 ஆண்டுகளாக வைத்த கோரிக்கை, நேற்று நிறைவேறியது.--- மேலப்பாளையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், 2.50 கோடி ரூபாயில் உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணியை, அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தனர்.கட்சியினர்...சென்னிமலையில் உள்ள கொடிகாத்த குமரன் உருவச்சிலைக்கு, சென்னிமலை ஒன்றிய பா.ஜ., சார்பாக தலைவர் சுந்தர்ராஜ், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்தி.மு.க., சார்பாக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன்; அ.தி.மு.க., சார்பாக சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல்; காங்., சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி; தமாகா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர்; கொ.ம.தே.க., சார்பில் பொருளாளர் பாலு; கொடிகாத்த தியாகி குமரன் பேரவை தலைவர் ஐயப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில்லாமல் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.ஈரோட்டில்...கொடிகாத்த குமரன் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள அவரது சிலைக்கு, அமைச்சர் முத்துசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் செயலாளர் ராமலிங்கம்; தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி