உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயணிகள் நிழற்கூடம் திறப்பு

பயணிகள் நிழற்கூடம் திறப்பு

பவானி: பவானி அடுத்த வேம்பத்தி பஞ்., முனியப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் இல்லாமல் இருந்தது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில், பயணியர் நிழற்-கூடம் கட்டப்பட்டது. நேற்று அந்தியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், மக்கள் பயன்பாட்டிற்காக புதிய நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ