உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நள்ளிரவில் திரியும் மர்ம நபர்களால் புன்செய்புளியம்பட்டியில் மக்கள் பீதி

நள்ளிரவில் திரியும் மர்ம நபர்களால் புன்செய்புளியம்பட்டியில் மக்கள் பீதி

புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக, புங்கம்பள்ளி, அய்யம்பாளையம், பனையம்பள்ளி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக, மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்-றனர். கடந்த வாரம் புங்கம்பள்ளி அருகேயுள்ள தச்சுபெருமாள் பாளை-யத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஐயப்ப பக்-தர்கள் போல் மாலையணிந்து வந்த இருவர், மயக்க பொடி துாவி தங்க கம்மலை பறித்து சென்றனர். மேலும் பனையம்பள்ளி, அண்ணாநகர் உள்ளிட்ட கிராமங்களில், 10க்கும் மேற்பட்ட தோட்ட மின் மோட்டார்களில் ஒயர் திருட்டு போயுள்ளது. அய்-யம்பாளையத்தில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் மின் ஒயர்களை திருடி சென்றுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் தோட்டத்து வீடுகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தை போக்க, புன்செய் புளியம்பட்டி நகர பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை