உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்துக்கள் சுடுகாட்டில் கிறிஸ்தவர்களுக்கு இடம் ஒதுக்கீடு; ஜம்பை மக்கள் அதிர்ச்சி

இந்துக்கள் சுடுகாட்டில் கிறிஸ்தவர்களுக்கு இடம் ஒதுக்கீடு; ஜம்பை மக்கள் அதிர்ச்சி

பவானி: பவானி அருகேயுள்ள ஜம்பை டவுன் பஞ்.,க்கு உட்பட்ட சின்னியம்பாளையத்தில், காலியிடத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள், மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். வருவாய்துறை பதிவேட்டிலும் மயானமாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவ அமைப்பினர் கொடுத்த மனுவின் அடிப்படையில், முறையாக விசாரணை நடத்தாமல், அந்த இடத்தை கிறிஸ்துவ அமைப்பினர் கல்லறை தோட்டமாக பயன்படுத்தலாம் என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பவானி தாலுகா அலுவலகத்தில் நேற்று திரண்டனர். தாசில்தார் சித்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். 'பல்வேறு தரப்பு மக்கள் பயன்படுத்தும் மயானத்தில், கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டமாக அனுமதித்தால், தேவையில்லாத பிரச்னை ஏற்படும். ஜம்பை பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலம் வேறிடத்தில் உள்ளது. அதில் ஒரு இடத்தை ஒதுக்கலாம்' என்று மக்கள் கூறினர். ''இதுகுறித்து டவுன் பஞ்.,ல் தீர்மானம் போட்டால் நாங்கள் நிறைவேற்றப்படும். எனவே தீர்மானமாக போட்டு வாருங்கள்,'' என அதிகாரிகள் கூறவே, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ