போராட்டம் என மக்கள் முறையீடு
போராட்டம் என மக்கள் முறையீடுஈரோடு:பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இயக்கம் சார்பில், சந்திரசேகர் தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது: பெருந்துறை சிப்காட்டில், 2019ல் தோல் தொழிற்சாலைகளில் இருந்து மனிதர்களை கொல்லும் விஷத்தன்மை கொண்ட கழிவுகளை சுத்திகரிக்காமல், அருகே உள்ள சூரிய ஒளி தொட்டியில் வெளியேற்றி தேக்கியது.புகாரால் தோல் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. ஆனால் நான்கு ஆண்டுக்கு மேலாக அதே தொழிற்சாலையில் வேறு தொழில் நடந்து வருகிறது. பொதுமக்கள், அமைப்புகள் கொடுத்த புகாரால், 2024ல் கலெக்டரால் சீல் வைக்கப்பட்டது.தற்போது அதே தோல் ஆலை, 'எங்களுக்கும், அந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என என்.ஓ.சி., கொடுத்து, சிப்காட் நிர்வாகத்திடம் வேறு தொழில் செய்ய முறையிட்டுள்ளது. இதை அனுமதிக்க கூடாது.அங்குள்ள கழிவுகளை முற்றிலும் அகற்றாமல் அடுத்த நடவடிக்கைக்கு அனுமதி வழங்கக்கூடாது. தவறினால் மக்கள் போராட்டத்தை துவங்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.