உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு எஸ்.பி.,யிடம் மக்கள் மனு

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு எஸ்.பி.,யிடம் மக்கள் மனு

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி வைராபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:வைராபாளையம் பகுதி, நாட்ராயன் கோவில் வீதி, கல்யாணசுந்தரம் நகர், ராஜகணபதி நகர், பட்டேல் வீதி, நேதாஜி வீதி, பள்ளிக்கூட வீதி, மாரியம்மன் கோவில் வீதி என வாட்டர் ஆபீஸ் சாலை, பழைய நகராட்சி குடிநீர் வடிகால் நிலையம் வரை உள்ளது. அவ்விடம் முற்றிலும் குடியிருப்பு பகுதி. இங்கு மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் காளிங்கராயன் வாய்க்கால் கரை பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்க உள்ளதாக அறிந்தோம். கடை அமைவதற்காக பணி நடக்கும் இடத்தின் இருபுறமும், நெல், கால்நடை தீவனம், விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடமாகும். இப்பகுதி வாய்க்காலில், 2 படித்துறைகள் உள்ளன. மக்கள் துணி துவைப்பது, குளிப்பதும் அதிகம். டாஸ்மாக் கடை அமைந்தால் இவர்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை