உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்டுமான தொழிலாளர் போனஸ் கோரி மனு

கட்டுமான தொழிலாளர் போனஸ் கோரி மனு

கட்டுமான தொழிலாளர் போனஸ் கோரி மனுஈரோடு, அக். 15-தமிழ்நாடு எச்.எம்.எஸ்., கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: நலவாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ், 7,000 ரூபாய் வழங்க வேண்டும். மாதந்தோறும், 5ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான அமைப்பு சாரா ஆட்டோ வாரியங்களில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெற வாரிய அட்டையில் உள்ள வயதையே இறுதி ஆவணமாக ஏற்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி