குடிநீர் வசதி கோரி மனு
ஈரோடு: பெருந்துறை தாலுகா புஞ்சை பாலத்தொலுவு, ஹைவே சிட்டி பகுதியை சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதிக்கு குடிநீர், தெரு விளக்கு மற்றும் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.