உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொசு ஒழிப்பு பணியாளர் கூலி உயர்வு கேட்டு மனு

கொசு ஒழிப்பு பணியாளர் கூலி உயர்வு கேட்டு மனு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், கூலி உயர்வு கேட்டு ஆணையர் அர்பித் ஜெயினிடம் நேற்று மனு அளித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு தினசரி ஊதியமாக, 370 ரூபாய் ஊதியம் நிர்ணயித்துள்ளனர். இதில் பி.எப்., பிடித்தம் போக, 307 ரூபாய் வங்கி மூலம் கிடைக்கிறது. காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை பணி நேரமாக உள்ளது. ஆனால் பல்வேறு அரசு பணிகளில் மாலை வரை ஈடுபடுத்துகின்றனர்.கடந்த நான்கு ஆண்டுகளாக கூலியை உயர்த்தவில்லை. மதுரை, தேனி மாவட்டங்களை போல் தினசரி கூலியை, 690 ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !