உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாக்கடை வடிகாலுடன் சாலை வசதி கோரி மனு

சாக்கடை வடிகாலுடன் சாலை வசதி கோரி மனு

ஈரோடு, மா.கம்யூ., கொடுமுடி - மொடக்குறிச்சி தாலுகா கமிட்டி சார்பில், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், வழங்கிய மனுவில் கூறியதாவது: சிவகிரி டவுன் பஞ்., வார்டு எண், 13ல், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் சிறிய குழி பறித்தும், சாலைகளில் வெளியேற்றி வருகின்றனர். இதனால் நடைபாதை, சாலை, பெரிய குழிகளில் தண்ணீர் தேங்கி நோய் பரப்புமிடமாக உள்ளது.சில பகுதியில் சாலை வசதி செய்த போதே, சாக்கடை வடிகால் வசதியை செய்துவிட்டு, சாலை அமைக்க கோரியும் அவ்வாறு செய்யவில்லை. தற்போது கோரிக்கை வைத்த போது சாலை மட்டும் அமைப்பதாக கூறி உள்ளனர். தற்போது வேட்டுவபாளையம் சாலை முதல் கவுண்டம்பாளையம் சாலை வரை, சாலை போடும் பணி நடக்கவுள்ளது. வடிகால் வசதியுடன் சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !