மேலும் செய்திகள்
பாதாள சாக்கடை திட்டம் வார்டு மக்கள் கோரிக்கை
30-Apr-2026
ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மா.கம்யூ., கட்சியை சேர்ந்தவரும், நசியனுார் டவுன் பஞ்., 14வது வார்டு கவுன்சிலருமான தங்கவேல் தலைமையில், மனு வழங்கி கூறியதாவது: எனது வார்டான சிந்தன்குட்டையில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நான்கு அறைகள் கொண்ட கழிப்பிடம் மட்டுமே உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானதல்ல. இதனால் மக்கள், பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 20 அறைகள் கொண்ட கழிப்பிடம் ஏற்படுத்தித்தர வேண்டும். மேலும் நெசவாளர் காலனி, சிந்தன்குட்டை, மூலக்கரை சாலை என, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், போதிய குடிநீர் கிடைப்பதில்லை. போர்வெல் அமைத்து, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் மேல்நிலை தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
30-Apr-2026