பிரேமலதா சுற்றுப்பயணம் போலீசார் அனுமதி மறுப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நாளை, நாளை மறுதினம், தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா, மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அவருக்கு வரவேற்பு, ரத யாத்திரை, ரோடு ஷோ, சாலை பிரசாரம் மேற்கொள்ள ஆறு இடங்களில், தே.மு.தி.க., சார்பில் மாவட்ட போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதில் வரவேற்பு, ரத யாத்திரை, ரோடு ஷோ, சாலை பிரசாரம் மேற்கொள்ள போலீஸ் அனுமதி மறுத்துள்-ளது. நாளை பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை உள்ளரங்கில் நடத்த போலீசார் அனுமதித்துள்ளனர்.