உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவலர் வீரவணக்க நாள் போலீசார் மரியாதை

காவலர் வீரவணக்க நாள் போலீசார் மரியாதை

ஈரோடு, வீர மரணமடைந்த போலீசாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்.,21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளான நேற்று, தமிழகத்தில் கடந்த, 12 மாதங்களில் வீர மரணமடைந்த ஆறு பேர், நாட்டில் வீர மரணமடைந்த, 191 போலீசாருக்கு, ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்.பி., சுஜாதா தலைமை வகித்தார். கலெக்டர் கந்தசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். போலீஸ் சார்பில், 60 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ