மேலும் செய்திகள்
1,609 நெசவாளர்களுக்கு ரூ.15.8 கோடி மானிய கடன்
07-May-2025
ஈரோடு, ஜூன் 5இலவச வேட்டி, சேலைக்கு முழு கூலியை வழங்க விசைத்தறி சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.ஈரோடு, கைத்தறி மற்றும் துணி நுால் துறை உதவி இயக்குனர் சரவணனிடம், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் மனு வழங்கிய பின் கூறியதாவது:ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவச வேட்டி, சேலையை அரசு வழங்கி வருகிறது. மக்களின் நலன் என்பது இருந்தாலும், பல லட்சம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே முதல் நோக்கமாகும். நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்காக அமைக்கப்பட்ட இத்திட்டம், தற்போது நெசவாளர்களுக்கு பயன்படாமலும், அரசு உயர்த்திய, 10 சதவீத கூலியை உயர்த்தி வழங்காமலும், பழைய கூலியையே தொடர்ந்து வழங்கி வருவதாக நெசவாளர்கள் கூறுகின்றனர். இன்னும் சில இடங்களில், பழைய கூலியை விட குறைவான கூலியே வழங்குகின்றனர்.பழைய கூலியாக வேட்டிக்கு, 24 ரூபாய்க்கு பதில் உயர்த்தப்பட்ட கூலி, 26.40 ரூபாயும், சேலைக்கு பழைய கூலி, 43 ரூபாய்க்கு பதில் புதிய கூலியாக, 46.75 ரூபாயாக வழங்க வேண்டும். விசைத்தறியாளர்களுக்கு, வேலைவாய்ப்பை வழங்குவதற்காக துவங்கப்பட்ட இத்திட்ட பயன் முழுமையாக கிடைக்க செய்வதுடன், அறிவிக்கப்பட்ட புதிய கூலியை நிலுவையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
07-May-2025