உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதல்வர் விழாவால் சோலாரில் முன்னேற்பாடு தீவிரம்

முதல்வர் விழாவால் சோலாரில் முன்னேற்பாடு தீவிரம்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 605 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1.84 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஈரோடு அருகே சோலாரில், 26ல் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பணி, சோலார் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, அமைச்சர்கள், மக்கள் செல்வதற்கான வழித்தடம், மொபைல் டாய்லெட் என பல்வேறு ஏற்பாடு மும்முரமாக நடக்கிறது. சோலார் பஸ் ஸ்டாண்டில் சாலை, நிழற்கூடம் அமைக்கும் பணியும் ஜரூராக நடக்கிறது.அறச்சலுார் அருகே ஜெயராமபுரத்தில் பொல்லான் உருவச்சிலையுடன் கூடிய அரங்கம் திறப்பு விழா, தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துதல், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் நிறுவப்பட்ட பரமசிவன் உருவச்சிலை திறப்பு விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.பாதுகாப்பில் 3,100 போலீசார்தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை ஈரோடு வருகிறார். மறுநாள் (26ம் தேதி) மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்வர் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மட்டுமின்றி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவையில் இருந்து, 3,100 போலீசார் ஈரோடு வரவுள்ளனர். பொலிவு பெறும் சாலைகள்நாளை ஈரோடு வரும் முதல்வர் ஸ்டாலின், பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதனால் விருந்தினர் மாளிகையை துாய்மைப்படுத்தி அழகுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தனது பங்குக்கு பிரதான சாலைகளை துாய்மைப்படுத்தி, பொலிவாக்கும் செயலில் இறங்கியுள்ளது. குறிப்பாக ப.செ.பார்க்கில் இருந்து திண்டல் வரை வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனின் இருபுறமும் படிந்துள்ள மண்ணை நவீன கருவியால் அகற்றி, துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி